மே.6ஆம் திகதியன்று நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாநகர சபைக்குப் போட்டியிட்ட பந்துல பிரசாந்தவின் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பயன்படுத்திய ரிவால்வர், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கையடக்கத் தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை, பயாகல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மே 4 ஆம் திதி இரவு, களுத்துறை நாகொடபகுதியில் உள்ள வேட்பாளர் பந்துல பிரசன்னவின் வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். அவருக்கு வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், அன்று வந்த மோட்டார் சைக்கிள், அவர்கள் திருடிய இரண்டு மோட்டார் சைக்கிள்கள், முழு முகக் கவசங்கள் மற்றும் மூன்று கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவை மீட்கப்பட்டன.