ஆசிரியர் வேலைக்கு காத்திருப்போருக்கு….

ByEditor 2

May 21, 2025

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஆசிரியர் வெற்றிடங்கள்

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப் பிரதமர் விளக்கமளித்தார்.

தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 4,240

தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 2,827

தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 11,274

தமிழ் மொழியில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புவரை உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 6,121 ஆகவும் உள்ளதாக பிரதமர் கூறினார்.

மேல் மாகாணத்தில் சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி அரசப் பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையிலும், தரம் 6 முதல் 11 வரையிலும் பின்வரும் எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 1318

தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 1325

தமிழ் மொழிமூல வெற்றிடங்களின் எண்ணிக்கை – 397

கொழும்பு கல்வி வலயத்தில் சிங்கள மொழி மூல மற்றும் தமிழ் மொழி மூல அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையிலும், தரம் 6 முதல் 11 வரையிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை பின்வருமாறு,

சிங்கள மொழிமூலம் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 84

தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 85

தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 226

தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை -140 என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *