சீதா நதிக்கு மேலே புதிய நடைபாலம் திறப்பு

ByEditor 2

May 21, 2025

இரத்தினபுரியில் உள்ள குருவிட்ட – எரன்ன ஸ்ரீ பாத சாலையில் சீதா நதியின் ஊடாக கட்டப்பட்ட புதிய பாலம் அண்மையில் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இதற்காக, சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு முப்பது (30) மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.
இந்தப் பாலம் 60 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சஞ்சீவ கொடெல்லவத்த, திட்டமிடல் பணிப்பாளர் ருவன் பிரேமரத்ன, நிர்வாக பொறியியலாளர் சமன் வேரஹெர மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *