ஐஸூடன் ஐவர் கைது

ByEditor 2

May 20, 2025

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த மூன்று தினங்களாகக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, தலா 20 மில்லி கிராம் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்18, 20 வயதுக்கும் உட்பட்ட ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்வுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்த நடவடிக்கை பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதியில்உள்ள இளைஞர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விநியோகம் செய்ய ஏற்பாடு நடக்கிறது என்றும்அதில் இருந்து தங்களது பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *