தெஹிவளை நெடிமால பகுதியில் உள்ள ஒரு பொலிதீன் கடையில் சற்று நேரத்துக்கு முன்பு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் இலக்கு போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான படோவிட்ட அசங்கவின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.