போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு தொகை உரம் சுற்றி வளைப்பு

ByEditor 2

May 15, 2025

போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த பொலன்னறுவைப் பிரதேச 12 நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை சிரிபுர பிரதேசத்தில் வியாபாரி ஒருவரின் தலையீட்டில் நீண்ட காலமாக ஏமாற்று வித்தை இடம்பெற்றுள்ளதாகவும், 21% வீதம் நைட்ரஜன் காணப்படும் உரம் ஒரு தொகை 40% நைட்ரஜன் காணப்படுவதாக போலியாகத் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச் சுற்றி வளைப்பின் போது அதன் முகாமையாளர் உட்பட தொழிலாளர்கள் 12 பேர் , கலக்கப்பட்ட சுமார் ஆயிரம் தொகை உர மூடைகள், உரம் ஏற்றப்பட்ட 4 லொறிகள் மற்றும் மேலும் ஒரு தொகை உபகரணங்கள் போன்றவை கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவைப் பிரிவு விசாரணைப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியது.

ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபரான வியாபாரி பிரதேசத்தை விட்டு வெளியே தப்பியோடியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்வாறே அதிக விலை குறிப்பிடப்பட்ட ெவற்று உரம் சுமார் 2 மூடைகள் மற்றும் உரப் பைகளைத் தைக்கும் இயந்திரம், அதிக விலை குறிப்பிடும் இயந்திரம் சிலவற்றையும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *