சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

ByEditor 2

May 15, 2025

இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து கந்தக்காடு ,பதுமாதலன் திருக்கோணமலை,கொகிலாய் ,செபல் தீவு, மற்றும் பெக் பே ஆகிய கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 28 வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம்,

இரவு நேரங்களில் மின்சார விளக்குகள் மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த 38 நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, இலங்கை கடற்படை வெத்திலைகேனி நிலையம், இலங்கை கடற்படை கப்பல் கோத்தபய,பெரகும்பா, விஜயபா மற்றும் கடற்படை தளம் ஆகியவற்றினாலும் மீன்வள ஆய்வாளர் காரியாலயத்தின் உதவியுடனும் கடற்படையினர், இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 38 நபர்கள் 08 சட்டவிரோத வலைகள், 12 டிங்கிகள் மற்றும் மின் விளக்கு உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி டிங்கிப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிண்ணியா, திருகோணமலை மற்றும் கோட் பே ஆகிய இடங்களில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *