தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் இராஜதந்திர பயணத்தைத் தொடங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துள்ளார்..
வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல் – ஹமாஸ் போர், ஈரான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் சவூதி அரேபியாவிற்கு விஜயம்
