33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

ByEditor 2

May 13, 2025

2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.

சமீபத்திய SLTDA புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை மொத்த வருகை 930,794 ஆக உயர்ந்துள்ளது.

குளிர்காலத்திற்குப் பிறகு மேற்கத்திய நாடுகளிலிருந்து வருகையில் பருவகால சரிவு காணப்பட்டாலும், சராசரி தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 5,000 ஆகவே உள்ளது.

இருப்பினும், மே 2025 முதல் வாரத்திற்கான வருகைகள் முந்தைய ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளன – 2023 இல் 18,761 மற்றும் 2024 இல் 28,526 – இது ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது.

இதற்கிடையில், 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான சுற்றுலா வருவாய் 1,379 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 1,251.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 10.2% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

2025 ஏப்ரல் இல் சுற்றுலா வருவாய் மாத்திரமாக 646.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *