சீதுவை கட்டுநாயக்க, 18 ஆவது மைல்கல் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (06) காலை 10 மணியளவில், பொலிஸாரினால், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பிரதேசத்தில் நபரொருவர் அநாகரீகமாக நடந்து கொள்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்வதற்கு முயன்றுள்ளனர்.
எனினும், அவர், கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்தார். அவரை கைது செய்வதற்கான முயற்சியின் போதே, பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் சீதுவை விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
