உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (06) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறவிருக்கும் நிலையில்,
4,150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியமை தொடர்பில்,மார்ச் 20ஆம் திகதி முதல், மே. 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்த முறைப்பாடுகளில், 3,495 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், 655 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.