நீரில் சிக்கிய ஐவரில் மூவர் மீட்பு

ByEditor 2

May 2, 2025

சுற்றுலாவிற்கு சென்று தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த ஒரு குழுவில் ஐந்து பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர், மேலும் மூன்று இளம் பெண்கள் மீட்கப்பட்டாலும், நீரோட்டத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்கள் கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என்றும், கலகெதர, வெத்தேவ, நாரங்வல பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்றும் கூறப்படுகிறது

கண்டியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழுவில், ஒரு ஆடைத் தொழிற்சாலையிலும் ஒரு கடையிலும் வேலை பணியாற்றுபவர்கள் அடங்கியிருந்தனர் என்று கூறப்படுகிறது.

அவர்கள் தங்கள் நிறுவனங்களில் இருந்து விடுமுறை பெற்று சிலாபத்திற்கு, வியாழக்கிழமை (01) சுற்றுலா வந்ததாகவும், தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *