தண்ணீர் விற்றவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்

ByEditor 2

May 1, 2025
Human hand taking mineral water from shelf in supermarket

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்  ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

கொழும்பு, புறக்கோட்டை, பெஸ்டியன் வீதியில் உள்ள தனியார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள கடை உரிமையாளர் ஒருவர், தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, இந்த அபராதம், புதன்கிழமை (30) விதிக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைமை அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *