பசறை நகரில் நீர் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் க்ளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் கசிவைத் தொடர்ந்து நான்கு பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த வைத்தியசாலையில் இருந்த அனைத்து உள்நோயாளிகள் வார்டுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிலிருந்த, 14 நோயாளிகள் தற்காலிகமாக ஹாப்டன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனைக்கு அருகே உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த 76 வயதுடைய பெண் ஒருவர் குளோரின் சிலிண்டர் கசிவு காரணமாக சுவாசிப்பதில் சிரமமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 43 வயதுடைய ஆண், 73 வயதுடைய பெண் மற்றும் 26 வயதுடைய பெண் ஆகியோர் பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பசறை பிரதேச சபைக்குட்பட்ட பசறை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பயன்படுத்தப்படும் க்ளோரின் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டதால், அவர்கள் நால்வரும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும், பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.