எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்
வாக்களிக்கும் வகையில், தனியார் துறை ஊழியர்களுக்குத் தேவையான விடுப்பு வழங்குமாறு தேர்தல் ஆணையம் முதலாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 84A (1) இன் படி, இந்த விடுப்பு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வழங்கப்பட வேண்டும்.
பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு உள்ள தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் விடுப்பின் நீளம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
• 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் அரை நாளாகவும்,
• 40 முதல் 100 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒரு நாளாகவும்,
• 100 முதல் 150 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒன்றரை நாளாகவும்,
• 150 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்களாகவும் விடுமுறை காலத்தை சரிசெய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது