நுவரெலியாவில் 16 குடும்பங்கள் இடம்பெயர்வு

ByEditor 2

Apr 29, 2025

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிற்பகல் நேரத்தில் கடுமையான மழை பெய்து வருகின்றமையினால் நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில்  பெரும்பாலான தாழ் நில பிரதேசங்களில்  வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .

நுவரெலியாவில் திங்கட்கிழமை (28) பிற்பகல் பெய்த பலத்த மழையால் தாழ்­நிலப் பிர­தே­சத்தில் வசித்து வந்த மக்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்து வரு­கின்­றனர்.

இதில் அதிக வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டு வெள்ள நீர் முழுமையாக வீடுகளுக்குள் புகுந்து வீடுகள் சேத­ம­டைந்­துள்­ள­தால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.  இதனால் 16 குடும்­பங்­களைச் சேர்ந்த 61 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள நிலையில் அவர்கள் தோட்ட ஆலயத்தில் பாதுகாப்பாக  தங்­க­வைக்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்றனர்.

எனினும் தற்போது வெள்ள நீர் வடிந்தோடிக்கொண்டிருக்கிறது இருப்பினும், வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

மேலும் குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாக தனது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பாரிய நட்டத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *