தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

ByEditor 2

Apr 29, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.
 
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4 நாட்கள் ஒதுக்கப்பட்டன.
 
இதற்கமைய கடந்த 24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முதற்கட்டமாக அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றது.
 
அத்துடன், நேற்று மூன்றாவது நாளாக வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இறுதியாக இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
 
தபால் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட நான்கு நாட்கள் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் கடந்த மூன்று நாட்களில் வாக்களிக்க தவறிய தகுதிபெற்ற அரச உத்தியோகத்தர்கள் தவறாமல் இன்றைய தினம் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *