2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின.
இதன்படி, குருநாகல், சந்தலங்கா மத்திய கல்லூரியின் மாணவி நெத்மி நவோத்யா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும், கம்பஹா, ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த செனாலி சமத்கா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
