ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக சென்ற மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (24) கண்டிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
அங்குள்ள மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு குறித்த பகுதிகளுக்குச் சென்றுள்ளார்.
இதேவேளை, வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நேற்றிரவு தன்சல் (உணவு தானம்) வழங்கப்பட்டுள்ளன.