ஜனாதிபதி அநுரகுமார விவசாயிகளுக்கு உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார்.
புத்தளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இறக்குமதி
இதன்படி, எதிர்காலத்தில் அரசாங்கம் களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்குமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய சட்டங்களை உருவாக்கியேனும் இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.