குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

ByEditor 2

Apr 25, 2025

திருகோணமலையில் கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் இன்றையதினம் நிகழ்ந்துள்ளது.

கிண்ணியா குறிஞ்சாகேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்து வயதான முகமது ரியாஸ் ரம்மி எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த சிறுவன் கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் ஐந்தில் கல்வி கற்று வருபவராவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இன்று மாலை குறிஞ்சாக்கேணி ஆற்றில் 3 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்ததாகவும், அந்த நேரம் அவர்கள் மூவரும், நீரோட்டத்தில் சிக்குண்டபோது, ஒருவர் காணாமல் போனதாகவும், ஏனைய இரு சிறுவர்களும் தப்பித்துக் கரையை அடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

காணாமல் போன சிறுவனை, பிரதேசவாசிகள் சுமார் 45 நிமிடங்கள் தேடி மீட்டுள்ளதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஐ.எம். சாபி வைத்தியசாலைக்கு வருகை தந்து, மற்றைய இரு சிறுவர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று பொலிசாரிடம் அறிக்கையை கையளித்தார்.

உயிர் இழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *