இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் (UPDATE)

ByEditor 2

Apr 25, 2025

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிநுவர ஶ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு வாயிலுக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி, குற்றச் செயலானது கடந்த மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; ஒரு சந்தேக நபர் கைது | Two Youths Shot Dead Suspect Arrested

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளை வாகனத்தில் அழைத்துச் சென்றதோடு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டி அவர்களுக்கு உதவியமைக்காக குறித்த சந்தேக நபர் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் தலல்ல தெற்கு, கந்தர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *