இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மிர் பிராந்தியத்தில் ஆயுததாரிகளெனச் சந்தேகிக்கப்படுவோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
பிரபலமான பஹல்கம் பகுதியிலேயே நேற்று இத்தாக்குத்ல் இடம்பெற்றுள்ளது.
2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பொதுமக்கள் மீதான மோசமான தாக்குதல் இதுவாகும்.
சவுதி அரேபியாவுக்கான தனது விஜயத்தை இடைநடுவில் முடித்துக் கொண்டு இன்று காலை இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.
காஷ்மிர் எதிர்ப்பு என்ற மிகவும் அறியப்படாத ஆயுதக் குழுவொன்று சமூக வலைத்தள பதிவொன்று மூலம் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.