நுவரெலியா, நல்லத்தண்ணி – கினிகத்தேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நல்லத்தண்ணி – கினிகத்தேனை பிரதான வீதியில் 300 அடி பள்ளத்தில் கார் விழுந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தொழினுட்ப கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகிய நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர் லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.