பொலிஸ் சேவையில்  5,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள  நடவடிக்கை 

ByEditor 2

Apr 22, 2025

இந்த ஆண்டு (2025) இலங்கை பொலிஸ் சேவையில்  5,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2,000 அதிகாரிகளை மிக விரைவாக பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3,000 பேர் டிசெம்பரில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளிடையே திங்கட்கிழமை (21) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் சேவையை மிகவும் திறமையாகவும், திறம்படவும் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை பொலிஸ் சேவைக்கு தனி சம்பள அமைப்பை தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *