சுமார் 24 கோடியே 30 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கைன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் சுங்கப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த 59 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மிக சூட்சுமமான முறையில் இதனை நாட்டிற்கு கொண்டுவந்துள்ளதுடன் அவரிடம் இருந்து 4 கிலோ 855 கிராம் கொக்கைன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதியுடன் சந்தேக நபரான பயணியும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
