நாசா உருவாக்கியுள்ள புதிய திட்டம் ; பூமி மீது மோதும் விண்கற்கள்

Byadmin

Apr 19, 2025

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது.இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து நாசா ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது.அவ் ஆவணப்படத்தில் விண்கற்கள் மோதலை எதிர்கொள்ள 3 நடவடிக்கைகளை பின்பற்றுவதாக குறிப்பிட்டிருக்கிறது. இதன் மூலம் விண்கல் மோதலிலிருந்து பூமியை பாதுகாக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

முதலில் எந்த விண்கல் பூமியை நோக்கி வருகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அந்த விண்கலின் அளவு என்ன? எங்கிருந்து வருகிறது? எப்போது பூமியை மோதும் என்பதை கணக்கீடு செய்ய வேண்டும்.

மோதலால் பூமியில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் கணிக்க வேண்டும். குறிப்பாக விண்கல் எந்த பகுதியை தாக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் விண்கல்லின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும்.

கல் எந்த வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதன் பாதையில் மாற்றம் ஏற்படுமா? கல்லின் தன்மை என்ன? பூமிக்கும் கல்லுக்கும் இடையேயான தூரம் எவ்வளவு குறைந்து வருகிறது? பூமியின் ஈர்ப்பு விசை எப்படி இந்த கல்லை பாதிக்கும்? என்பதை பற்றி அறிந்திருக்க வேண்டும். கடைசியாக எல்லாம் உறுதியாகிவிட்டது.விண்கல் நிச்சயம் பூமியை தாக்கும் என்பதை உறுதி செய்த பிறகு, தேவையெனில் அந்த விண்கல்லின் பாதையை மாற்ற வேண்டும். இதற்காக நாசா DRAT என்கிற மிஷனை முயன்று பார்த்திருக்கிறது.

இந்த மிஷன்படி, விண்கல்லில் ஒரு விண்கல்லை இறக்கி, அந்த விண்கல்லின் தன்மை பற்றி ஆய்வு செய்திருக்கிறது. இருப்பினும் இந்த மிஷன் மூலம் விண்கல்லின் பாதையை மாற்ற முடியுமா? என்பது உறுதி செய்யப்படவில்லை.. இதேவேளை விண்கற்களில் எது எப்போது பூமியை மோதும் என்பதை ஓரளவுதான் கணிக்க முடியும்.

இருப்பினும் இந்த பணியை நாசா சிறப்பாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *