கொழும்பில் வெளிநாட்டு பெண்ணுக்கு துயரமான அனுபவம்

Byadmin

Apr 19, 2025

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பெண்ணொருவரிடம் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த வெளிநாட்டு பெண், கொழும்பில்  தனியார் பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது சில்லறை வியாபாரி ஒருவர் அருகில் அமர்ந்து அப்பெண்ணிடம்  தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார்.இதன்போது, குறித்த பெண் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்ததையடுத்து பேருந்து நடத்துநர் உள்ளிட்டவர்கள் அந்த நபரை வேறு இருக்கையில் அமர வைத்துள்ளனர்.பின்னர், அந்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி காலிமுகத்திடல் கடற்கரைக்கு சென்றுள்ள நிலையில் குறித்த நபர் அங்கும் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.இதன்போது மிகவும் அச்சமடைந்த பெண், அங்கிருந்தவர்களிடம் கூறிய நிலையில் அவர்கள் அந்த சில்லறை லியாபாரியை வெளியேற்றியுள்ளனர்.இச்சம்பவங்களை குறித்த வெளிநாட்டு பெண், பேருந்தில் கிடைத்த மிக மோசமான அனுபவம்” எனக் குறிப்பிட்டு காணொளியாக அவரது சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *