பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை

ByEditor 2

Apr 19, 2025

மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் 33 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த  பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *