பாணந்துறை கடலில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீந்தி மகிழ்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய மொஹமட் இர்பான் மொஹமட் மஹ்மது மற்றும் யாசிர் அரபாத் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பண்டாரகம, அதுலுகம மற்றும் வத்தளை, ஹுனுபிட்டிய ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.
காணாமல் போன இரண்டு பாடசாலை மாணவர்களைத் தேடும் பணிகளை பொலிஸாரும் கடற்படை உயிர்காப்பாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.