உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும்.
தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல்
அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை நேற்றைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைந்துள்ளோம். எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும்.
தபால்மூல வாக்களிப்பு பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுவதாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை அடிப்படையற்றது. ஏற்கெனவே தீர்மானித்ததற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22), புதன்கிழமை (23) மற்றும் வியாழக்கிழமை (24) ஆகிய தினங்களில் தபால்மூல வாக்கெடுப்பு நடத்தப்படும்.