உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

ByEditor 2

Apr 15, 2025

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இதில் 2,53,390 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 79,795 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

நாடு முழுவதும் 2,312 பரீட்சை மையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் இந்தத் பரீட்சை நடைபெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *