’முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர நடவடிக்கை’

ByEditor 2

Apr 13, 2025

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மன்னார் நானாட்டான் பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்  போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

முன்னைய அரசாங்கங்கள் மக்கள் மீது சுமையாக இருந்தன. ஆனால் இன்று எம்மிடம் மிகவும் சிறிய அமைச்சரவை உள்ளது. எங்கள் அரசாங்கம் உங்களுக்கு ஒரு சுமையாக இல்லை. செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன, வீண்விரயம் குறைக்கப்பட்டுள்ளது. திருட்டுகள் இடம்பெறுவது இல்லை.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கியுள்ளோம். அந்தப் பணம் மக்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமானால், உள்ளூராட்சி மன்றமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.  கிராமத்தில் உள்ள தலைவர்கள் திருடர்களாக இருந்தால், அந்தப் பணத்தை ஒதுக்குவதால் எந்தப் பலனும் இருக்காது. இதனால்தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *