இன்று (ஏப்ரல் 13) அதிகாலை 5 மணிக்கு ‘இளஞ்சிவப்பு நிலவு’ (Pink Moon) வானில் தோன்றியது.
இந்த ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவாக இது காணப்பட்டது. சந்திரன், பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ள அபோஜி புள்ளியில் இருப்பதால், இதை “மைக்ரோ மூன்” என்றும் அழைக்கின்றனர்.
‘பிங்க் மூன்’ என அழைக்கப்படும் காரணம், வட அமெரிக்காவில் வசந்தத்தில் பூக்கும் “மோஸ் பிங்க்” எனும் பூவின் பெயர் தான். நிலவு பிங்க் நிறத்தில் தோன்றாது என்றாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பின் கிழக்கு வானில் தோன்றும் போது ஆரஞ்சு நிறத்தில் தோன்ற வாய்ப்புண்டு.
இந்த அழகிய நிலவை இந்தியா முழுவதும் கண்கள் மட்டுமே பயன்படுத்தி பார்க்க முடிந்தது!