தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இந்த விசேட வாய்ப்பை வழங்க அந்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த தினகளில் கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு தேவையான உணவுப்பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய உறவினர்கள் கைதிகளை பார்வையிட நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.