அஸ்வெசும பெறுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

ByEditor 2

Apr 11, 2025

அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கு புதுவருட வாழ்த்துக்களுடன் 3000 ரூபாய் கொடுப்பனவை ரூ 5000 உயர்த்தி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து  70 வயதை அடைந்த முதிர்ந்தோருக்காக இந்த பணம் செலுத்தப்படவுள்ளதாக அஸ்வேசும குழு குறிப்பிட்டுள்ளது

நலத்திட்டப் பலன்கள் வாரியத்தின்படி,

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 1,737,141 குடும்பங்களுக்கு ரூ.12.63 பில்லியனும், தகுதியுள்ள திட்டப் பயனாளி குடும்பங்களில் (11) 70 வயதுக்கு மேற்பட்ட 580,944 பெரியவர்களுக்கு ரூ.2.9 பில்லியனும் வரவு வைக்கப்படும்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை முதல் தங்கள் வங்கிக் கணக்கு மூலம் தங்கள் பயனாளி உதவித்தொகையை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *