பிரியாணியால் பிரிந்த உயிர்

ByEditor 2

Apr 10, 2025
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீனா (வயது36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ரமேஷ் திருக்காஞ்சி பகுதியில் வீடு ஒன்று வாங்கி அதனை சரிசெய்து வருகிறார். அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

பிரியாணியால் பிரிந்த தாயின் உயிர் ; நிர்கதியாக நிற்கும் குழந்தைகள் | Life Separated By Biryani Destitute Children

பிரியாணியால் பிரிந்த உயிர்

அப்போது மீனா சமையல் செய்யாமல் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து ரமேஷ் மதியம் 1 மணியளவில் வில்லியனூருக்கு சென்று பிரியாணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர், பிற்பகல் 3 மணிக்கு மேல் பிரியாணியுடன் வந்துள்ளார்.

இதனால் மீனா கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தார். ரமேஷ் வெளியே சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது மின் விசிறியில் புடவையில் மீனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரை மீட்டு வில்லியனூர் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும்  அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *