வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி

ByEditor 2

Apr 10, 2025

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – மத்திய வங்கக் கடலில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. 

அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது. 

மேலும், குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக (மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில்) பலத்த காற்று வீசக்கூடும் என்றும், பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை நிலையம்  அறிக்கை வௌியிட்டுள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அவதானம் செலுத்துமாறு தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *