இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை வியாழக்கிழமை (10) சந்திக்கவுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கக் கோரியதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.