காலி – கோட்டை சுவரின் அருகே உள்ள வீதியின் ஒரு பகுதி நேற்று திடீரென தாழிறங்கியுள்ளது.
சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு பகுதி ஐந்து அடி ஆழத்திற்கு தாழிறங்கியதால் அங்கு பதற்றமான நிyலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த இடத்தில் நிலச்சரிவுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும், இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.