
‘கலிப்சோ’ எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவை, நானுஓயா மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இடம்பெறும்.
இந்த சேவை, செவ்வாய்க்கிழமை (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘கலிப்சோ’ ரயில் காலை 8:10 மணிக்கு நானுஓயாவில் இருந்து புறப்படும்.
நானுஓயாவில் இருந்து தெமோதர நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடம் இருந்து 10,000 ரூபாய் அறவிடப்படுவதுடன் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகளாக புனரமைக்கப்பட்டு உள்ளன. உணவு, இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளது .
தற்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையகத்தில் ரயிலில் பயணித்து இயற்கையை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமாக உள்ளனர் இதன் காரணமாகவே குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தெமோதர வரை இயங்கும் ரயில் பண்டாரவளை வரையிலும், பின்னர் தெமோதரையில் இருந்து பதுளை வரையிலும் இயக்கப்படும் என்றும், அதேபோல் விரைவில் மேலதிகமாக ‘கலிப்சோ’ ரயில் சேவையில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறித்த ரயில் பயணித்த ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார்.
