யாசகம் பெறுபவர்களை அகற்ற நடவடிக்கை

ByEditor 2

Apr 8, 2025

இலங்கையில் வீதி மற்றும் மின் சமிக்ஞைகளுக்கு அருகில் யாசகம் பெறுபவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரினால் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 பதில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை  

இது தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த இடங்களில் கடமையிலிருக்கும் சில பொலிஸார் கூட யாசகர்கள் மற்றும் வியாபாரிகள் குறித்து கவலைப்படுவதில்லை என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வாகன வாடகை

அதேவேளை சில யாசகர்கள் இளம் குழந்தைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து, அவர்களை யாசகம் பெறுவதற்கு அழைத்துச் செல்வதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *