இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ByEditor 2

Apr 8, 2025

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக குறிப்பிட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது சினாபாங் நகருக்கு தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பகு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *