’ரைசிங் பாரதம்’ மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ 

ByEditor 2

Apr 8, 2025

இந்தியாவில், ​நடைபெறும் ‘ரைசிங் பாரதம்’  மாநாட்டில் ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

தெற்காசிய பிராந்தியத்திற்கான வளர்ச்சிக்கான  பட்டியல் (The South Asian Platter: Menu for Growth) என்ற தொனிப்பொருளில்  இந்த மாநாடு செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  

வளர்ந்து வரும் இளம் தலைவர்களின் கண்ணோட்டத்தில் பிராந்திய வளர்ச்சியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு, கடந்த காலத் தலைமைத்துவ  அனுபவங்களுடனும், எதிர்காலத்திற்கான அவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன்  கலந்துரையாடியுள்ளனர். 

நிலையான வளர்ச்சி, பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் இளைஞர் தலைமைத்துவத்திற்கான உத்திகளைப் பற்றி கலந்துரையாடலில் தெற்காசியா முழுவதும் செல்வாக்கு மிக்க குரல்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாக ரைசிங் பாரத்  மாநாடு செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *