மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட ‘மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024’ தொடர்பான அறிக்கை திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
2024 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த முதற்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் இலங்கை மக்கள் தொகை, அதன் வளர்ச்சி மற்றும் மாவட்டங்களுக்கு இடையே மக்கள் தொகை பரவல் குறித்த விவரங்களை வழங்குகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள், அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமான கொள்கைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை வகுப்பதற்கும் அரசாங்கம் அல்லாத ஏனைய நிறுவனங்களுக்கும் இந்த குடிசன கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை.
இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சேகரிப்பு வரலாற்றில் முதல் முறையாக, டேப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் சாதனங்களைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.