எதிர்வரும் 20ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான புத்திக மனதுங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்தோடு கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் பேராயர் இல்லத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.