மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

ByEditor 2

Apr 5, 2025

இந்தியா, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த  நெசவு தொழிலாளியான 49 வயதுடைய தந்தைக்கு  2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாதபோது கணவன் மூத்த மகளிடம் பாலியல் சேட்டையில்  ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அவரது மனைவி கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

குடும்ப பிரச்சினை

இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளியின் மனைவி கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  தாய் இறந்த பின்னரும் மகளிடம் தந்தை  தொடர்ந்து பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

இந் நிலையில்  நேற்று முன்தினம் தாய்க்கு  ஈமச்சடங்கு நடந்த போது இதில் கலந்து கொண்ட உறவினர்களிடம் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தந்தையின்  செயற்பாடு குறித்து  தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள்,  தந்தையிடம் தட்டிக்கேட்ட போது  அவர் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து  தந்தை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *