இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு தெரு நாய்களை அகற்ற வேண்டாம் என இந்திய விலங்குகள் நல வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் இன்று ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டது.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது கொழும்பு நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தெரு நாய்களை அகற்றும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முன் பல விலங்கு ஆர்வலர்கள் கலந்து கொண்டு, போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.