அடுத்த இரண்டு மாதங்களில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பெற்றோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், பேருந்து கட்டணக் குறைப்பால் பொதுமக்கள் பயனடைய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் இதன் பாதகங்கள் ஜூலை மாதத்தில் வரும் என்றார்.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தங்களில் இந்த முறை 12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டண திருத்தங்கள் செய்யப்படுவதால், பேருந்து கட்டணங்களில் நிச்சயமாக அதிகரிப்பு இருக்கும் என்றார்.