தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 500 மேலதிக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
முதற்கட்டமாக எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்த திட்டம் அமுல்ப்படுத்தப்படும்.
பின்னர், மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்படும் என, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.